“ரௌத்திரம், களம்” ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் பிரகாஷ் நிக்கி.
ஸ்வதீப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து இன்னும் பெயரிடப்படாத புதிய படம் மூலம் தயாரிப்பாளராகிறார்.
இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரைத் தொடர்ந்து பிரகாஷ் நிக்கியும் தயாரிப்பாளராக மாறுகிறார்.
புதுமுகங்கள் நடிக்கவிருக்கும் இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார். ராஜா DFT ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிரகாஷ்நிக்கி இசையமைக்கிறார். நிர்வாகத் தயாரிப்பு – நமஸ்காரம் சரவணன்
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
அடுத்த மாதம் சென்னை உட்பட புறநகர் பகுதியில் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.