‘ஈழம்’ என்ற வார்த்தையை ‘வெட்டிய’ சென்சார்

பேட்லர்ஸ் சினிமா தயாரிப்பில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘யானை மேல் குதிரை சவாரி’.

இப்படம் பற்றி இயக்குனர் கருப்பையா முருகன் கூறியதாவது,

“ஒரு காரியத்தை செய்ய முயற்சி செய்யாமலே முடியாதுன்னு முடிவு பண்றதுதான் உலகத்துலயே நம்பர் ஒன் முட்டாள்தனம்கிறத மனசுல வச்சிக்கிட்டு ஒரு டீம் தங்களால முடியாத காரியத்தை முடிக்க முயற்சி பன்றாங்க. இத காமெடி, சென்ட்டிமென்ட் கலந்து பண்ணிருக்கோம். நான் கடவுள் ராஜேந்திரன் செம ஜாலியான கேரக்டர்ல நடிச்சிருக்கார்.

அர்ச்சனா சிங், லொள்ளுசபா சாமிநாதன், வழக்கு எண் முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி, மிப்பு, தாரிகா மற்றும் பலர் நடிச்சிருக்காங்க.

அரக்கோணம் அருகே நடந்த யானைமேல் குதிரைசவாரி’ படத்தின் படப்பிடிப்பில் நான்கடவுள் ராஜேந்திரன், லொள்ளுசபா சாமிநாதன், நாயகி அர்ச்சனாசிங் நடித்துக் கொண்டிருந்தபோது, நிறைய பொதுமக்கள் கூடி படப்பிடிப்பை வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல், இளைஞர்கள் ராஜேந்திரனை பார்த்து ‘தலைவா’ ‘சிங்கம் சகாயம்’ என்று கத்தி அதகளபடுத்தியதோடு விடாமல் ‘உங்க சிக்ஸ் பேக்க காமிங்க’ என்று வேண்டுகோள் வைக்க, ராஜேந்திரனும் சட்டையை கழட்டி சிக்ஸ் பேக்கை காட்டி மிரட்டினார். இதைக் கண்டு ரசிகர்கள் மிரண்டு போனார்கள்,” என்றார்.

இந்தப் படத்திற்கான சென்சாரிலும் சில பிரச்சனைகள் நடந்ததாக படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

‘யானை மேல் குதிரை சவாரி’ படத்தின் டைட்டிலில் ‘யானை மேல் குதிரை சவாரி, போயி பாரு தெரியும் உன் சேதி’ என்று தொடங்கும் பாடலின் இடையே ‘ஈழத் தமிழனை காக்கப் போறீங்களா?’ என்ற ஒரு வரி வருகிறது. அதில் ‘ஈழம்’ என்ற வார்த்தையை எடுத்தே ஆகவேண்டும் என்று சென்சார் போர்டு அதிகாரி சொல்ல, பாடலாசிரியரும், இயக்குனருமான கருப்பையா முருகன் எவ்வளவோ போராடியும் அந்த வார்த்தையை பாடலில் வைக்க அனுமதி தர மறுத்து விட்டார்கள். வேறு வழியின்றி, வேதனையோடு அந்த வார்த்தையை கட் செய்தார் இயக்குனர் என்கிறார்கள்.

Read Previous

தயாரிப்பாளராகும் மற்றுமொரு இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி

Read Next

சென்சார் எந்த அடிப்படையில் பண்ணப்படுகிறது ? – ஸ்ரீகாந்த் கேள்வி