இமானைப் பாராட்டிய சிற்பி

சுசீந்திரன் இயக்கும் மாவீரன் கிட்டு படத்தை ஏசியன் சினி கம்பைன்ஸ் ஐஸ்வேர் வீ.சந்திரசாமி மற்றும் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் இணைந்து தயாரிக்கின்றனர்.

இயக்குநர் சுசீந்திரனின் நேர்த்தியான திட்டமிடுதல் காரணமாக ‘மாவீரன் கிட்டு’ படப்பிடிப்பு இடைவிடாது நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடைபெற்றபோது அங்கு சென்ற தயாரிப்பாளர் மாவீரன் கிட்டு படத்தின் வசனம் மற்றும் பாடல்களை எழுதும் கவிஞர் யுகபாரதியுடன் பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது “உங்கள் ஏற்றுமதி தொழிலைப் போல மிக அழகான திட்டமிடுதலை ஒவ்வொரு நாளும் உருவாக்கி மொத்த குழுவினருக்கும் நீங்கள் தரும் ஆதரவு மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது” என்று பாராட்டினாராம் யுகபாரதி.

இதையே வேறு விதமாக இசையமைப்பாளர் சிற்பி சொன்னாராம்.

“நானும் தம்பி சந்திரசாமியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனால் தம்பி உருவாக்கிய படக்குழுவினரைப் பார்த்த போது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

குறிப்பாக தற்போது இளைஞர்களை அதிக அளவுக்குக் கவரும் இசையமைப்பாளராக உள்ளவர்களில் டி.இமானும் சிறந்தவர்.

இவரின் இசையில் அனைத்துப் பாடல்களும் எல்லாத் தரப்பினரையும் கவர்ந்து இழுக்கக்கூடியதாக இருக்கும்.

இப்படிபட்ட அருமையான கூட்டணி நல்லதொரு வெற்றி படைப்பை கொடுப்பார்கள்” என்று சொன்னாராம் சிற்பி.

ஒரு இசையமைப்பாளரை மற்றொரு இசையமைப்பாளர் பாராட்டுவது ஆச்சரியமான ஒன்றுதான்.

Read Previous

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் பொன்ராம்

Read Next

Sivakarthikeyan and Ponram, third time lucky !