அதிக தியேட்டர்களில் ‘முடிஞ்சா இவன புடி’

‘நான் ஈ’ சுதீப் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘முடிஞ்சா இவன புடி’ படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் வரும் வெள்ளிக் கிழமை முதல் தமிழ்நாட்டில் கூடுதலாக 120 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளது.

கன்னடத்தில் இப்படம் நான்கு நாட்களில் 22 கோடியை வசூல் செய்து கன்னடத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது.

இப்படத்தில் ‘நான் ஈ’ சுதீப், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், நாசர், சதீஷ், டெல்லி கணேஷ் , இமான் அண்ணாச்சி, முகேஷ் திவாரி, சரத் லோகித்சவா, சாய் ரவி, அவினாஷ், அச்சுதா ராவ், லதா ராவ், சிக்கன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

Read Previous

படப்பிடிப்பில் ‘செஞ்சிட்டாளே என் காதல’…

Read Next

அருள்நிதி, தான்யா நடிக்கும் ‘பிருந்தாவனம்’ ஆரம்பம்