விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சேதுபதி’, ஜெய், பிரணிதா நடிப்பில் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் உருவாகி வரும் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ஷான் சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக ராதாமோகன் இயக்கும் ‘பிருந்தாவனம்’ படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.
“அழகிய தீயே, அபியும் நானும், மொழி, பயணம்” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய ராதாமோகன் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
அருள்நிதி கதாநாயகனாகவும், நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் விவேக் நடிகர் விவேக்காகவே நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கர்நாடகாவில் உள்ள சக்லேஷ்ப்பூரில் இனிதே துவங்கியது.
படப்பிடிப்பு துவங்கும் முன், நடிகர் விவேக் தனது 27,38,001வது மரக் கன்றை இன்று சக்லேஷ்ப்பூரில் நட்டார்.
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் . ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையையும், கதிர் கலை இயக்கத்தையும் மேற்கொள்ள, பொன் பார்த்திபன் வசனம் எழுதுகிறார். நிர்வாகத் தயாரிப்பு – கே.பி.பஷிர் அஹமது, மக்கள் தொடர்பு – நிகில்.
படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.