நடிகர் தனுஷ் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களை ஏற்கெனவே எடுத்திருக்கிறார்.
முதல் முறையாக அதிகாரப்பூர்வ இயக்குனராக இன்று முதல் புதிய அவதாரம் எடுக்கிறார்.
‘வேலையில்லா பட்டதாரி, தங்கமகன்’ ஆகிய படங்களை தனுஷ் இதற்கு முன் தன்னுடைய பெயரே இல்லாமல் இயக்கினார் என திரையுலகத்தில் ஏற்கெனவே ஒரு பேச்சு உள்ளது.
அந்தப் பேச்சையெல்லாம் போக்க இப்போது அவரே இயக்குனர் ஆகிவிட்டார். அவர் இயக்கும் முதல் படத்திற்கு ‘பவர் பாண்டி’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா இயக்குனராக அறிமுகமான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் நாயகன் ராஜ் கிரண் தான் தனுஷ் இயக்கும் முதல் படத்திலும் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிக, நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்திற்கு ‘ஜோக்கர்’ படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தனுஷ் இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்காததும் ஆச்சரியமே.
இப்டத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது.