சமுத்திரக்கனி நடிக்கும் ‘ஆண் தேவதை’

சிகரம் சினிமாஸ் தயாரிப்பில் தாமிரா இயக்க உள்ள புதிய படத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க உள்ளார்.

இந்தப் படத்திற்கு ‘ஆண் தேவதை’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

இயக்குநர் கே. பால​ச்​சந்தரின் மாணவரான தாமிரா, ஏற்கெனவே பாலச்சந்தர்– பாரதிராஜா இருவரையும் ‘ரெட்டச்சுழி’ படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கியவர்.

‘ஆண் தேவதை’ படத்தில் ரம்யாபாண்டியன், கவின், கஸ்தூரி, ‘பூ’ ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், அறந்தாங்கி நிஷா​,யாழ் நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் ​மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

”இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்ஒர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது.

இப்படிப்பட்ட இன்றைய பரபர சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.

ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு ?. இன்று நிலவும் பொருளாதார சூழலும், கடன் வாங்கும் மனப்பான்மையும் மனிதர்களை எந்த எல்லைக்கு அழைத்து​ச் செல்கிறது என்பதையும் படம் உணர வைக்கும்,” என்கிறார் இயக்குனர் தாமிரா.

இயக்குனர் சிகரம் என அழைக்கப்படும் பாலச்சந்தரிடம் கொண்ட அன்பின், மதிப்பின் அடையாளமாக அவரது நினைவாக ‘சிகரம் சினிமாஸ்’ என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்து ​ஃ​பக்ருதீனுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார் தாமிரா. இப்படத்தைத் தன் குருநாதருக்கு சமர்ப்பணமாக்கவும் உள்ளார்.

விஜய்மில்டன் – ஒளிப்பதிவு, ஜிப்ரான் – இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் – கலை இயக்கம் செய்ய உள்ளார்கள்.

முழுக்க முழுக்க சென்னையில் உருவாகவுள்ள ‘ஆண்தேவதை’ யின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தயாரிப்பு – ​சிகரம் சினிமாஸ்​
இயக்கம் – தாமிரா
தயாரிப்பாளர் – ஃபக்ருதீன்
ஒளிப்பதிவு – விஜய் மில்டன்
இசை – ஜிப்ரான்
எடிட்டிங் – காசிவிஸ்வ நாதன்
கலை இயக்கம் – ஜாக்சன்
சண்டைப்பயிற்சி – ரன் ரவி
காஸ்ட்யூம் டிசைனர்- கீர்த்திவாசன் & ஷோபியா சவுரிராஜன்
தயாரிப்பு நிர்வாகம்- அண்ணாமலை
பி.ஆர்.ஓ – ஆ. ஜான்

Read Previous

Kattappava Kaanom – Hey Penne – Lyric Video

Read Next

Soundarya Rajinikanth confirms divorce news

Most Popular