சினிமாவிற்கு வந்த ‘சரவணன் மீனாட்சி’ கவின்…

“சுட்டகதை, நளனும் நந்தினியும்“ படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார்.

‘நட்புனா என்னனு தெரியுமா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவக்குமார் இயக்குகிறார். இவர் இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.

“மூன்று நண்பர்கள் ஒரு பெண்னை காதலிக்க விரும்புகிறார்கள், மூவரில் ஒருவரான கதாநாயகன் எவ்வாறு மற்ற நண்பர்களையும் தாண்டி கதாநாயகியை தன் மீது காதல் வயப்பட வைக்கிறான் என்பதை அனைத்து ரசிகர்களும் குடும்பத்தோடு பார்த்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாக உருவாகும் படம்தான் ‘நட்புனா என்னனு தெரியுமா’,” என்கிறார் இயக்குனர்.

‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்த கவின் முதன்முறையாக வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்க, இப்படத்தின் நகைச்சுவைக்கு ஏற்ற விதத்தில் மொட்டை ராஜேந்திரன், இளவரசு, அழகம் பெருமாள், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க இவர்களுடன் அருண்ராஜா காமராஜ்,ராஜு, வெங்கி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

Read Previous

Sivakarthikeyan ready to strike it rich

Read Next

Why Suriya postponed his S 3 ?