சிறிய பட்ஜெட் படங்களை திரையிடுங்கள் – ராதாரவி பேச்சு

R j மீடியா கிரியேஷன் சார்பில் குமரேஷ் குமார் இயக்கத்தில் ராம்கி நடித்துள்ள படம் ‘ஆங்கிலப் படம்’.

இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் ராதாரவி, பவர் ஸ்டார், இயக்குநர்கள் RV உதயகுமார், பேரரசு மற்றும் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி (எ) நட்ராஜ் கலந்துகொண்டனர். அவர்கள் திரைப்படத்தையும், திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் வாழ்த்திப் பேசினர்.

ராதாரவி பேசும் போது,

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் பெருமளவில் வெற்றிபெற்றுவிடுகிறது, இருப்பினும் இது சினிமாவுக்கு முக்கியமல்ல ஏனெனில் மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் உருவாக குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வருடங்களாகும், ஏனெனில் ஹீரோ கால்ஷீட், இசையமைப்பாளர் கால்ஷீட், இயக்குனர் கால்ஷீட் என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.

ஆனால் சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றால்தான் தொடர்ந்து படமெடுப்பார்கள். அதன்மூலம் பல்வேறு கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். தியேட்டர் உரிமையாளர்கள் சிறிய பட்ஜெட் படங்களையும் திரையிடவேண்டும். சால்ட் அண்ட் பேப்பர் ஸ்டைல் ரஜினி, அஜித்திற்குப் பிறகு ராம்கிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

பேரரசு

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் சிவப்பாக இருந்தால் அவர்களை LOVER BOY என்ற இமேஜுக்குள் வைத்துவிடுவார்கள், ஆனால் ராம்கி மட்டுமே சிவாப்பாக இருந்து ஆக்க்ஷன் ஹீரோவானவர். கிராமத்தில் பல்வேறு திறமையான இளைஞர்கள் உள்ளார்கள், அவர்களை தமிழ் சினிமாவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

RV உதயகுமார்

தமிழ் சினிமாவில் வேகத்தை மக்கள் விரும்புகிறார்கள், உணர்ச்சிபூர்வமான படங்களை விரும்புவதில்லை என்றார். மேலும் பாடல் வரிகளில் ஆங்கில வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறர்கள். தமிழ் சொற்களை பயன்படுத்துவதில்லை. இளம் இசையமைப்பாளர்கள் தமிழ் சொற்களை பாடல்வரிகளில் பயன்படுத்தவேண்டும். ஜாதி மதம் என எவ்வித வேறுபாடுமின்றி எந்நாட்டவரையும் வாழ வைக்கும் ஒரே நாடு தமிழ்நாடு.

நட்டி

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பிரம்மாண்ட திரைப்படங்களை மட்டுமே எடுக்கமுடியும், உணர்ச்சிபூர்வமான படங்களை எடுக்க முடியாது என்ற இமேஜை தகர்த்தெறிந்தவர் R V உதயகுமார். ஆங்கிலப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், பிற கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

பவர்ஸ்டார் பேசும் போது,

ஆங்கிலப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மிகவும் திறமையானவர்கள். இது போன்ற திறமையான கலைஞர்கள் எனது திரைப்படத்திற்குக் கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் எனது திரைப்படத்தில் இது போன்ற கலைஞர்களைக் கண்டிப்பாக பயன்படுத்துவேன். ராம்கியின் ஹேர் ஸ்டைலைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது.

Read Previous

Remo gets ‘U’

Read Next

Vijay Sethupathi gets most bankable young star award

Most Popular