‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திற்கு தடை நீக்கம்

அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், நிக்கி கல்ராணி, ஆனந்தி மற்றும் பலர் நடித்த படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’.

இப்படத்தின் வெளியீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நேற்று நீதிமன்றம் பட வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதித்தது. அதை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதை இன்று விசாரித்த நீதிபதி படத்திற்கு பிறப்பித்த தடை உத்தரவை விலக்கி தீர்ப்பளித்தார்.

மேலும், தொடரப்பட்ட வழக்கு ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத் தயாரிப்பாளரை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் படத்தை வெளியிட எந்தத் தடையுமில்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Read Previous

Puriyatha Puthir Telugu rights sold

Read Next

Modi thanks Rajini, Kamal

Most Popular