‘காற்று வெளியிடை’ – மற்றுமொரு மயக்கும் பாடல்…

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியிடப்பட்டது.

வைரமுத்து எழுதிய ‘சாரட்டு வண்டியில…’ என்ற அந்தப் பாடலை ஏ.ஆர்.ரைஹானா, திப்பு, நிகிதா காந்தி ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

ரகுமானின் இசையில் மற்றுமொரு மயக்கும் கல்யாணப் பாடலாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

இதற்கு முன் ரகுமான் இசையில் வெளிவந்துள்ள ‘அலைபாயுதே’ படத்தின் ‘யாரோ…யாரோடி…’, ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் ‘அவளுக்கென்ன…’, ‘காதலர் தினம்’ படத்தில் ‘நினைச்சபடி நினைச்சபடி…’, ‘உயிரே’ படத்தில் ‘நெஞ்சினிலே..’ பாடல், ‘ராவணன்’ படத்தில் ‘கெட…கெட…’, ஆகிய கல்யாணப் பாடல்களின் வரிசையில் இப்போது ‘காற்று வெளியிடை…’ படத்தின் ‘சாரட்டு வண்டியிலே…’ பாடலும் இடம் பிடித்துள்ளது.

இதற்கு முன் ‘காற்று வெளியிடை’ படத்திலிருந்து வெளியான ‘அழகியே….’, ‘வான் வருவான்…’ ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

ஏப்ரல் மாதம் ‘காற்று வெளியிடை’ படம் வெளியாக உள்ளது.

Read Previous

Saarattu Vandiyila – Kaatru Veliyidai – Song

Read Next

குற்றம் 23, எதிர்பார்ப்பு என்ன ?