மீண்டும் எழுந்த ‘சூப்பர் ஸ்டார்’ பஞ்சாயத்து

‘சூப்பர் ஸ்டார்’ என்று தங்களது பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வதில் பல நடிகர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.

ஏற்கெனவே, ரஜினிகாந்த் படங்களில் நடிக்கக் கொஞ்சம் இடைவெளி விட்ட சமயத்தில் ‘யார் அடுத்த சூப்பர் ஸ்டார்’ என விஜய்யும், அஜித்தும் போட்டி போட்டார்களோ இல்லையோ அவர்களை அந்த சிக்கலில் சிக்க வைக்க பலர் முயற்சித்தார்கள்.

ரஜினிகாந்த் தான் தமிழ்த் திரையுலகத்தின் ஒரே சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் சொன்னாலும் லிட்டில் சூப்பர் ஸ்டார், ஜுனியர் சூப்பர் ஸ்டார் என ஆக பலர் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழி இன்று காலை முதல் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு தன் பின்னால் மிகப் பெரும் கூட்டம் வந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகு அவருடைய செயல்கள் அப்படித்தான் இருந்தன.

அவரைப் பற்றிப் பேசுபவர்களும் அதை ஆமோதிப்பது போலவே பேசி வந்தார்கள். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் பிரச்சனைக்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்புகளில் அது எதிரொலித்தது.

இந்த சூழ்நிலையில் இன்று வெளிவந்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டிலில் ராகவா லாரன்ஸ் பெயருடன் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழி சேர்க்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் உடனே சூடுபிடித்துக் கொண்டது. ரஜினி ரசிகர்களும் சேர்ந்து கொள்ள காலை முதலே ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பற்றித்தான் பரபரப்பு இருந்து வருகிறது.

ஆனாலும், இன்று மதியம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகவா லாரன்ஸ், “படத்தின் டைட்டிலில் அப்படி போட்டது எனக்குத் தெரியாது. கடைசி நிமிடத்தில் இயக்குனர்தான் அப்படி சேர்த்துவிட்டார். ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினி மட்டும்தான்” என்று கூறினாலும் மீம்ஸ்கள் பறந்து கொண்டிருக்கின்றன.

இனி, மற்ற நடிகர்களின் பட்டப் பெயர்களை இப்படியும் சேர்த்துக் கொள்ளலாம்..

மக்கள் சூப்பர்ஸ்டார்
மக்கள் உலக நாயகன்
மக்கள் இளையதளபதி
மக்கள் அல்டிமேட் ஸ்டார்
மக்கள் புரட்சித் தளபதி
மக்கள் சின்ன தளபதி
மக்கள் புரட்சித் தமிழன்
மக்கள் புரட்சிக் கலைஞர்
மக்கள் மக்கள் நாயகன்
மக்கள் மக்கள் கலைஞர்
மக்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார்
மக்கள் மக்கள் செல்வன்
மக்கள் மக்கள் திலகம்
மக்கள் நடிகர் திலகம்

மக்கள்…………

Read Previous

Motta Shiva Ketta Shiva Review & Rating

Read Next

Vizhithiru from 17 March

Most Popular