சரவணன் யார் என்பதை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்புண்டு.
சர்வானந்த், ஜெய், அஞ்சலி, அனன்யா மற்றும் பலர் நடிக்க 2011ல் வெளிவந்து அனைவரையும் நெகிழ வைத்த காதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கியவர்தான் சரவணன்.
அதன் பின் ‘இவன் வேற மாதிரி, வலியவன்’ ஆகிய படங்களையும், கன்னடத்தில் ‘இவன் வேற மாதிரி’ படத்தை ‘சக்ரவியூகா’ என்ற பெயரில் இயக்கினார்.
விபத்து ஒன்றில் சிக்கியதால் ஓய்வில் இருந்த சரவணன், நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இப்போது ‘ராங்கி’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் முருகதாஸ் கதை எழுதி உள்ளார்.
த்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.