தலைவா…. – ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்த ராஜமௌலி

திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் இப்போது ‘பாகுபலி 2’ படத்தைப் பாராட்டி டிவீட் போடவில்லை என்றால் அவர்களை வித்தியாசமாகப் பார்த்து விடுவார்கள் போலிருக்கிறது.

இன்று தன் வீட்டில் உள்ள தியேட்டரில் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்திருக்கிறார். படம் பார்த்து முடித்ததும் படத்தைப் பாராட்டி ஒரு டிவீட் போட்டுள்ளார்.

“பாகுபலி 2’ – இந்திய சினிமாவின் பெருமை. கடவுளின் சொந்தக் குழந்தை ராஜமௌலிக்கு என்னுடைய சல்யூட்,” எனக் கூறியுள்ளார்.

ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்த ராஜமௌலி,

“தலைவா….கடவுளே எங்களைப் பாராட்டியது போல் உள்ளது. எங்கள் குழுவே வானத்தில் மிதக்கிறது. இதைவிடப் பெரிது எதுவுமில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.

 

Read Previous

லைவ் ஆர்ட் மியூசியம் – சென்னையில் ஒரு சிலை அருங்காட்சியகம்

Read Next

அய்யனார் வீதி – விமர்சனம்