இந்தியத் திரையுலகில் எந்த ஒரு படமும் படைக்காத சாதனையை ‘பாகுபலி 2’ படம் படைத்துக் கொண்டிருக்கிறது.
ஹாலிவுட் படங்களில் உள்ள கிராஃபிக்ஸ் போன்று இந்திய சினிமாவில் வராதா என்று ஏங்கித் தவித்த ரசிகர்களுக்கு ‘பாகுபலி 2’ படம் ஒரு பெருமையாக அமைந்துள்ள.
சின்னச் சின்ன குறைகளைக் கூட கண்டு கொள்ளாமல் இந்திய ரசிகர்கள் ‘பாகுபலி 2’ படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அது படத்தின் முதல் வார இறுதி வசூலில் எதிரொலித்துள்ளது.
உலக அளவில் 3 நாளில் இப்படம் 500 கோடியைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. எந்த ஒரு இந்தியப் படமும் புரியாத சாதனை இது. தெலுங்குத் திரையுலகத்தில் இருந்து வெளியாகியுள்ள இப்படத்தின் வசூல் விவரம்.
ஆந்திரா, தெலுங்கானா – 105 கோடி
தமிழ்நாடு – 33 கோடி
கேரளா – 18 கோடி
கர்நாடகா – 39 கோடி
வட இந்தியாவின் மாநிலங்கள் – 182 கோடி
வெளிநாடுகள் – 135 கோடி
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளையும் சேர்த்து இவ்வளவு தொகையை வசூலித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் முந்தைய தமிழ்ப் படங்களின் வார இறுதி வசூல் சாதனையை ‘பாகுபலி 2’ படத்தால் முறியடிக்க முடியவில்லை. மற்ற மாநிலங்களில் முதல் வார இறுதி வசூலில் இப்படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது என்கிறார்கள்.