இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் கம்பெனி ‘காக்கா முட்டை, விசாரணை’ ஆகிய வித்தியாசமான படங்களை அடுத்து ‘லென்ஸ்’ என்ற படத்தை வெளியிடுகிறது.
இந்தப் படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்றைய சோஷியல் மீடியா யுகத்தில் அதனால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றிய கதைதான் இந்தப் படம்.
சோஷியல் மீடியாவை எந்த அளவிற்கு பாதுகாப்பாக உபயோகப்படுத்த வேண்டும் என்பதை இந்தப் படம் மூலம் யதார்த்தமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
இந்தப் படத்தை வெளியிடும் வெற்றிமாறன் படம் பற்றிக் கூறியதாவது?
“காக்கா முட்டை, விசாரணை’ ஆகிய வித்தியாசமான படங்களின் வரிசையில் இந்த ‘லென்ஸ்’ படமும் இடம் பெறும். சமுதாயத்திற்குத் தேவையான ஒரு முக்கிய படம் இது. ‘காக்கா முட்டை, விசாரணை’ ஆகிய படங்களுக்கு எப்படி ஒரு வரவேற்பு கொடுத்தீர்களோ, அப்படிப்பட்ட வரவேற்பை இந்தப் படத்திற்கும் கொடுக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்டார்.
வரும் வெள்ளிக் கிழமை மே 12ம் தேதி இப்படம் வெளியாகிறது.