மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பு ஆரம்பம்

ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினிகாந்தின் 163வது படமான இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

ரஜினிகாந்த் நடிக்கும் 164 ஆவது படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.

பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்திற்கு ‘காலா’ என்று பெயர் வைத்து படத்தின் முதல் பார்வையையும் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியது.

ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஒரே இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்தான். அவருக்குப் பின் இந்தப்பெருமையைப் பெற்றுள்ள இயக்குநர் பா.இரஞ்சித் மட்டுமே.

கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். இவர்களுடன், ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உட்பட மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்தில் நடிக்கிறது.

இசை – சந்தோஷ்நாராயணன்
பாடல்கள் – கபிலன், உமாதேவி
ஒளிப்பதிவு – முரளி ஜி
கலை இயக்கம் – டி.ராமலிங்கம்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
சவுண்ட் டிசைனர் – ஆண்டனி பி ஜெயரூபன்
கிரியேட்டிவ் டிசைனர் – வின்சி ராஜ்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
நடனம் – சாண்டி
ஆடை வடிவமைப்பு – அனு வர்தன், சுபிகா
காஸ்ட்யூம்ஸ் – செல்வம்
ஒப்பனை – பானு பாஷ்யம், ராஜா
ஸ்டில்ஸ் – ஆர்.எஸ்.ராஜா
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே. அகமது
நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.வினோத்குமார்
தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், ஆர். ராகேஷ்
எழுத்து, இயக்கம் – பா.இரஞ்சித்
தயாரிப்பு – வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்

Read Previous

Raja Rani, new serial on Vijay Tv

Read Next

பிருந்தாவனம் விமர்சனம்