ரஜினிகாந்தை ‘420’ என்று குறிப்பிடும் சுப்பிரமணிய சாமி

‘காலா’ படப்பிடிப்பிலிருந்து சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு அமெரிக்காவில் உடல் நலப் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் சென்றுள்ளார்.

அங்கு ஒரு கேளிக்கை விடுதி ஒன்றில் அவர் சூதாட்டம் ஆடுவது போன்ற ஒரு புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது.

அது பற்றி சுப்பிரமணியசாமி நேற்று இரவு இட்ட ஒரு பதிவில் ரஜினிகாந்த்தை ‘RK 420’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வாவ், யுஎஸ் கேசினோ ஒன்றில் ஆர்கே 420, அவருடைய உடல் நலத்தை முன்னேற்றிய போது…அவருக்கு எங்கிருந்து டாலர்கள் வந்தது என்பது குறித்து அமலாக்கப் பிரிவு கட்டாயம் விசாரிக்க வேண்டும்,” என்றும் கூறியுள்ளார்.

அது மட்டுமல்ல அந்த டிவிட்டர் பதிவில் அவர் சிலருக்கு அளித்துள்ள பதிலில், ‘ஆர்கே 420 ரசிகர்கள் பலர் படிக்காதவர்கள்’ என்றும் கூறியிருக்கிறார்.

ரஜினி ரசிகர்கள் பலரும் அந்தப் பதிவில் சுப்பிரமணிய சாமியை விமர்சித்து வருகிறார்கள்.

Read Previous

கேளிக்கை வரி விவகாரம், கேட்டு விட்டார் ரஜினிகாந்த்

Read Next

தியேட்டர் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது, டிக்கெட் விலை என்ன ?