காட் பிக்சர்ஸ் பிரபுசாலமன் தயாரிக்க, ஆர்.பி.கே எண்டர்டைமன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூபாய்’.
அன்பழகன் இயக்கத்தில் சந்திரன், ஆனந்தி, கிஷோர் ரவிசந்திரன், சின்னிஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘‘பணம் எல்லோருக்கும் அவசியம் தான், அதை நியாயமாக சம்பாதித்தால் சந்தோஷமாக வாழலாம். நேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சந்தோஷத்தை தொலைப்பதோடு சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். இதைத் தான் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.
ஏற்கனே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட போது 500, 1000 ரூபாய் பிரச்சனையால் இந்த ‘ரூபாய்’ ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப் பட்டது. பல இடையூறுகளைக் கடந்து வரும் 14 ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது. புதிதாக வந்த ரூபாய் நோட்டை மக்கள் ஏற்றுக் கொண்டதைப் போல் இந்த ரூபாயையும் ஏற்றுக்கொள்வார்கள்,” என்கிறார் படத்தின் இயக்குனர் அன்பழகன்.