வெங்கம் பிரபு இயக்கத்தில் சத்யராஜ், நாசர், மிர்ச்சி சிவா, ஜெய், சம்பத், சந்திரன், ரெஜினி, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் ‘பார்ட்டி’ படத்தின் படப்பிடிப்பு பிஜி தீவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் ஷாம் பிஜி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
‘பார்ட்டி’ படத்தில் நடிப்பது குறித்து ஷாம் கூறியதாவது,
“வெங்கட் பிரபு அண்ணன் இயக்கும் படம். அம்மா கிரியேசன்ஸ் சிவா அண்ணன் தயாரிப்பு. இதில் ஒரு அழகான, ஸ்டைலிஷ் கேங்ஸ்டர்.
வெங்கட் அண்ணன் இயக்கிய ‘மங்காத்தா’ அஜித் சாருக்கு ஏகப்பட்ட இளைஞர்களை ரசிகர்களாக இழுத்து வந்தது. எனக்கும் எதோ மாற்றம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிவா அண்ணன் ஒரு நாள் போனில் கூப்பிட்டு கிளம்புங்க ஃபிஜிக்கு எனச் சொன்னார். உடனே, கிளம்பி வந்துவிட்டேன்.
என் மீது அவருக்கு ஒரு சொந்த சகோதரன் போல அன்பு உண்டு. அதனால் மறு கேள்வி கேட்காமல் கிளம்பிவிட்டேன். ‘பார்ட்டி’ படத்தில் பிரச்சனை பண்ணக் கூடிய மனதில் பதியக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு இளமையான, ஜாலியான டீம் இது. படப்பிடிப்பில் இருப்பதே பார்ட்டி பண்ற மாதிரிதான் இருக்கு.
ஸோ, இதிலேயே என் இன்னொரு இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கலாம்,” என்கிறார் ஷாம்.