ஒரே நாளில் அண்ணன், தம்பி படங்களின் டீசர்

தமிழ்த் திரையுலகில் பல வாரிசு நட்சத்திரங்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என இருக்கிறார்கள்.

அண்ணன் இயக்குனர், தம்பி நாயகன் என அந்தக் கூட்டணியும் இருக்கிறது. அவர்களில் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா, தம்பி நடிகர் ஜெயம் ரவி முக்கியமானவர்கள்.

நேற்று இவர்களின் படங்கள் டீசர் ஒரே நாளில் வெளியானது. மோகன் ராஜா இயக்கிய ‘வேலைக்காரன்’ பட டீசர் மாலை வெளியானது. ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக்’ டீசர் அதற்கு முன்னதாக மதியமே வெளியானது.

ஒரே நாளில் அண்ணன், தம்பி இருவரின் படங்களின் டீசர் வெளியானது யதேச்சையானதா அல்லது முன்னரே திட்டமிடப்பட்டதா என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

ஆனாலும், இரண்டு டீசர்களுமே வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று யு டியுபில் அதிகப் பார்வைகளைப் பெற்று வருகின்றன.

வேலைக்காரன் டீசர்

டிக் டிக் டிக் டீசர்

Read Previous

Velaikkaran – Official Teaser

Read Next

சமூக வலைத்தளங்கள், முழுமையாக விலகினார் சிம்பு