லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க ஏஆர். ரகுமான் இசையமைக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘2.0’ படத்தின் முதல் கண்ணோட்டம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
இது பற்றிய அறிவிப்பை படத்தின் இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். இதுவரையில் ‘2.0’ படத் தயாரிப்பில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பதை விளக்கும் வீடியோவாக அந்தக் கண்ணோட்டம் இருக்கும்.
‘விவேகம், மெர்சல்’ என சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களிலும், யு டியூபிலும் சாதனை நடந்து கொண்டிருக்க ‘2.0’ படத்தின் இந்த சிறிய வீடியோ எத்தகைய தாக்கத்தை இந்தியத் திரையுலகில் ஏற்படுத்தப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘பாகுபலி’ படங்களை விட பிரம்மாண்ட செலவுடன் உருவாகி வரும் ‘2.0’ , ‘பாகுபலி’யின் யு டியூப் சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கலாமா…அப்போதுதான் தமிழ் சினிமாவின் பெருமை இந்த உலகிற்கு இன்னும் அதிகமாகத் தெரிய வரும்.