ஜல்லிக்கட்டுப் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என தமிழ் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார்.
மருத்துவம் படிக்க முடியாத சோகத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணம் குறித்து தொடர்ந்து அவருடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
நேற்று இரவே அனிதாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
“உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் இன்று வரையிலும் தமிழர்களே. எந்தத் தேர்விலும் வெற்றி பெறும் அறிவும் திறமையும் எம் மாணவர்களுக்கு உண்டு.
பயிற்சி எடுக்கும் முன்னரே பரீட்சை வைத்து தோல்வியை ஏற்படுத்தியது வெட்கக்கேடான செயல்.
மருத்துவர் அனிதா மறைவுக்கு காரணமான அனைவருக்கும் எம் மாணவர்கள் தண்டனையை வழங்குவார்கள்,” என ஜி.வி.பிரகாஷ் டிவிட்டரில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.