லத்தீன் அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவம் “அபியும் அனுவும்”

B. R. விஜயலட்சுமி இயக்கத்தில் பியா பாஜ்பாய் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அபியும் அனுவும்’ .

படம் பற்றி இயக்குனர் B. R .விஜயலக்ஷ்மி பேசுகையில், ” இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காதல் கதை பொதுவாக யாரும் கையாள யோசிக்கும் மற்றும் பார்த்துப் பார்த்து கையாள வேண்டிய கதையாகும்.

லத்தீன் அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தக் கதை பின்னப்பட்டது. வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் காதலர்கள் சந்திக்கும் சவால்கள், இந்தக் காலத்து காதலில்,சமூக ஊடகங்களின் பங்கு ஆகிய விஷயங்களும் இப்படத்தில் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.

தனது வாழ்நாளில் மிகச் சிறந்த நடிப்பினை இந்தப் படத்தில் பியா பாஜ்பாய் தந்துள்ளார். படத்தின் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். சிலர் நினைப்பது போல் ‘அபியும் அனுவும்’ கதை, புற்றுநோயைப் பற்றியதல்ல. இக்கதைக்கும் புற்றுநோய்க்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை.

தனக்குத் தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் கதாநாயகன் டோவினோ தாமஸ். இவர் போன்ற ஒரு திறமைசாலியை தமிழ் சினிமாவிற்கு ‘அபியும் அனுவும் ‘ மூலம் அறிமுகம் செய்வதில் எனக்குப் பெருமை என்கிறார் விஜயலட்சுமி.

இப்படத்தில் சுஹாசினி, பிரபு, ரோகினி மற்றும் மனோ பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘Yoodlee Films’ தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Read Previous

விஜய் டிவியில் புதிய தொடர் ‘நெஞ்சம் மறப்பதில்லை’

Read Next

கார்த்தி வெளியிட்ட ‘இட்லி’ பட டீசர்