‘பாகுபலி 2’ படத்தை மிஞ்சும் அளவிற்கு ‘2.0’ படம் இருக்கும் என்று தமிழ் ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில் படத்தின் 3 டி மேக்கிங் வீடியோ ஆச்சரியப்படுத்தியது. தமிழ் சினிமாவில் ஒரு உலக சினிமா, ஹாலிவுட் சினிமா என தாராளமாகச் சொல்லலாம்.
இந்தியத் திரையுலகத்திற்கே நேர்த்தியான பிரம்மாண்டம் என்றால் என்ன என்பதைக் காட்டியவர் இயக்குனர் ஷங்கர். ‘2.0’ படத்தை முற்றிலும் புதுமையாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் கடைசி பாடல் காட்சியின் படப்பிடிப்பு இன்று நடைபெறுகிறது. இதற்காக கடந்த சில நாட்களாகவே சென்னையில் எமி ஜாக்சன் நடன ரிகர்சலிலும், ஆடைகளை டிரையல் பார்ப்பதிலும் கலந்து கொண்டார். ஒரு சில ‘பேட்ச்’ காட்சிகள் தவிர இந்தப் பாடலுடன் ‘2.0’ படப்பிடிப்பு நிறைவடைகிறது.
அக்டோபர் 27ம் தேதி துபாயில் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதன் பின் ஹைதராபாத்தில் டீசர் வெளியீடும், சென்னையில் டிரைலர் வெளியீடும், நடைபெற உள்ளது. ஜனவரி 25ம் தேதி ‘2.0’ உலகம் முழுவதும் வெளியாகிறது.