தமிழ்நாட்டில் யாருக்கு ரசிகர்கள் அதிகம் என்பது ஒரு புறமிருக்க, யாருடைய படத்தை உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள் என்பதில் அவ்வப்போது போட்டி இருக்கும்.
இந்த உலக விளையாட்டை ‘சிவாஜி’ படத்திலிருந்து மிகவும் வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்தவர் ரஜினிகாந்த். அதன் பின் அஜித், விஜய், சூர்யா என பட்டியல் நீண்டு கொண்டுதான் இருக்கிறது.
சமீப காலமாக சில ஆயிரம் தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலும், ஊர்களிலும் கூட தமிழ்ப் படங்களைத் திரையிட்டுப் பார்ப்பதில் அந்த ஊர் தமிழர்கள் மிகவும் ஆவலாய் இருக்கிறார்கள். அதிலும் விஜய் படம் என்றால் அந்த ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள்.
விஜய் நடித்து அடுத்த வாரம் வெளிவர உள்ள ‘மெர்சல்’ படம் அதிகாரப்பூர்வமாக 3292 தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்கள். வெளியீட்டிற்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் இந்த எண்ணிக்கை கூடி 3500ஐயும் தொடலாம்.
அந்தப் பக்கம் அமெரிக்காவிலிருந்து இந்தப் பக்கம் ஆஸ்திரேலியா வரை பல புதிய ஊர்களிலும் ‘மெர்சல்’ வெளியாவது தமிழ் சினிமாவுக்கான அடுத்த கட்ட வளர்ச்சிதான்.
அப்படியே வசூலையும் அள்ளிக் கொண்டு வந்துவிட்டால் இந்த தீபாவளி ‘மெர்சல்’ தீபாவளி மட்டும்தான்.