7 சி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ள இப்படத்தின் இசை வெளியீடு, நவம்பர் மாதம் நடைப்பெற உள்ளது. இசை வெளியீட்டிற்கு முன்பாகவே இப்படத்தை வாங்க திரையுலகத்தில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம்.
விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியும், கௌதம் கார்த்திக்கின் சமீபத்திய வெற்றியும்தான் இந்த போட்டிக்குக் காரணம் என்கிறார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதி 8 வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருகிறார்.
இப்படத்தை அம்மே நாராயணா என்டெர்டெயின்மென்ட் வெளியிட உள்ளது.