‘கபாலி’ முதல் நாள் வசூலை ‘மெர்சல்’ மிஞ்சுமா ?

தமிழ் சினிமாவில் முதல் நாள் வசூலில் மிகப் பெரும் சாதனை படைத்துள்ளது ‘கபாலி’ படம்தான். அந்தப் படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 22 கோடியாக இருந்தது.

அதற்கடுத்து அஜித் நடித்து வெளிவந்த ‘விவேகம்’ படம் அந்த சாதனையை முறியடிக்கும் என்று சொன்னார்கள். ஆனால், ‘விவேகம்’ படம் சுமார் 16 கோடி மட்டுமே முதல் நாள் வசூலித்ததாகத் தகவல் வெளியானது.

இப்போது, விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் வெளியாகியுள்ளதால் இந்தப் படம் ‘கபாலி’ முதல் நாள் வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

‘மெர்சல்’ படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. கேரளாவில் சுமார் 300 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் படத்திற்கு நேற்று திடீரென பிரச்சனை கொடுத்தால் அங்கு காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆந்திரா, தெலுங்கானாவில் ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘அதிரிந்தி’ அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் ‘மெர்சல்’ படத்திற்கு மிகப் பெரும் வரவேற்பு இருந்துள்ளது. தமிழ்நாடு, கேரளாவில் நேற்று அனைத்து தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடியிருக்கிறது. அதனால், ‘கபாலி’ படத்தின் முதல் நாள் வசூலான 22 கோடி ரூபாயை ‘மெர்சல்’ மிஞ்சும் என்றே திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

சுமார் 25 கோடியாவது முதல் நாள் வசூல் ஆகலாம் என்று தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. முழுமையான விவரம் இன்று மாலைக்குள் வெளியாகலாம்.

Read Previous

மெர்சல் விமர்சனம்

Read Next

‘கபாலி, விவேகம்’ வசூலை மிஞ்சிய ‘மெர்சல்’ முதல் நாள் வசூல்

Most Popular