‘மெர்சல்’ முதல் நாள் வசூல் சாதனைகள், இவைதான்…

‘மெர்சல்’ படம் முதல் நாள் வசூலில் சில முதல் சாதனைகளைப் படைத்துள்ளதாகத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தெரிவிக்கிறார்கள்.

இவை அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை என்றாலும், பெரும்பாலோனோர் தெரிவிப்பதால் உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதன்படி, மெர்சல் படம் முதல் நாளில் படைத்துள்ள சில சாதனைகள்…

  • கேரளாவில் அதிக வசூலைப் பெற்ற முதல் படம் (மலையாளப் படங்களையும் சேர்த்து)
  • சென்னையில் அதிக வசூலைப் பெற்ற முதல் படம்
  • இங்கிலாந்தில் அதிக வசூலைப் பெற்ற முதல் தமிழ்ப் படம்
  • பிரான்ஸ் நாட்டில் முதல் நாளில் அதிகம் பேர் பார்த்த தமிழ்ப் படம் – 4700 இருக்கைகள்
  • அமெரிக்காவில் வார நாட்களின் மத்தியில் வெளியாகி அதிக வசூலைப் பெற்ற முதல் தமிழ்ப் படம்
  • இந்தியாவில் முதல் நாளில் விஜய்க்கு அதிக வசூலைப் பெற்றுத் தந்த முதல் படம்

என சில முதல் நாள் சாதனைகளைப் பலரும் பகிர்ந்திருக்கிறார்கள்.

‘மெர்சல்’ படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய விவரங்களைப் பார்த்ததன் மூலம் சராசரியாக 45 கோடி முதல் 50 கோடி ரூபாய் வசூலித்திருக்கலாம் என்று தெரிகிறது.

படத்தின் தயாரிப்பாளர் அறிவிக்கும் பட்சத்தில்தான் உண்மை வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வரும். அதுவரை யூகங்களின் அடிப்படையில்தான் படத்தின் வசூல் பற்றிய விவரங்கள் வெளியாகும். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

Read Previous

கௌரவ கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன்

Read Next

மலையாள மண்ணில் ‘மாஸ்’ காட்டும் விஜய்