ஆபாச காட்சி, சிகரெட் பிடித்து, அதிர்ச்சி தரும் அதுல்யா

அதுல்யா, யார் என்று கேட்பவர்களுக்கு, இந்த வருடத் துவக்கத்தில் வெளிவந்த ‘காதல் கண் கட்டுதே’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர். கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கிய இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் நல்ல விமர்சனத்தைப் பெற்றது.

அந்தப் படத்தில் அறிமுகமான அதுல்யா தற்போது ‘ஏமாலி’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை அஜித் நடித்த ‘முகவரி’, சிம்பு நடித்த ‘தொட்டி ஜெயா’ படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார்.

‘ஏமாலி’ படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. டீசரைப் பார்த்த பலரும் அதுல்யாவின் கிளாமரான நடிப்பைப் பார்த்தும், அவர் சிகரெட் பிடிக்கும் காட்சியைப் பார்த்தும் அதிர்ச்சியடைந்தனர்.

அது பற்றி தன்னுடைய டிவிட்டரில் அதுல்யா விளக்கம் கொடுத்தள்ளார். “டீசரைப் பார்த்து கதாபாத்திரத்தைப் பற்றியோ, படத்தைப் பற்றியோ முடிவுக்கு வராதீர்கள். படத்தில் கண்டிப்பாக நல்ல மெசேஜுடன் இருக்கும் ஒரு பாசிட்டிவ்வான கதாபாத்திரம் அது. எதிர்பாராத அந்த காட்சிகளால் சிலரை வருத்தமடைய வைத்ததற்கு மன்னிக்கவும். அது படத்தில் வராது,” என்று கூறியுள்ளார்.

டீசரில் வந்த அந்த ஆபாசமான காட்சிகள், சிகரெட் பிடிக்கும் காட்சிகள் படத்தில் வராது என்பதை படத்தின் இயக்குனர்தானே சொல்ல வேண்டும்.

மேலும், டீசரில் கேப்ஷனாக இது ஒரு ‘யு’ படம் என படத்திற்கு தணிக்கை வாங்குவதற்கு முன்பே எப்படி அப்படி டீசரில் போடலாம் என்றும் தெரியவில்லை.

அதுல்யா இப்படி ஆபாசமாக நடித்திருப்பது பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிய பிறகுதான் தெரிகிறது, அவருக்கும் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று.

படத்தில் யார் ஏமாளியோ இல்லையோ, படத்தில் நடித்திருக்கும் அதுல்யா ‘ஏமாலி’ ஆகாமல் இருந்தால் சரி.

ஏமாலி – டீசர்

Read Previous

என் படங்களில் சமூக நீதி இருக்கும் – இயக்குனர் சுசீந்திரன்

Read Next

என் ஆளோட செருப்பக் காணோம் – டிரைலர்

Most Popular