யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கும் ‘பியார் பிரேமா காதல்’

‘பாகுபலி 2’ படத்தை தமிழில் வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், யுவன்ஷங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரெய்சா ஜோடியாக நடிக்க முழுக்க முழுக்க காதல் கதையாக இப்படம் உருவாகிறது. மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணா நாயகனாக நடித்து விரைவில் வெளிவர உள்ள ‘கிரகணம்’ படத்தை இயக்கியுள்ள இளன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் பாடல் கம்போசிங் சமீபத்தில் மலேசியாவில் முடிந்தது. இதற்காக இயக்குனர் இளன், இசையமைப்பாளர் யுவன், தயாரிப்பாளர் ராஜராஜன் ஆகியோல் மலேசியா சென்றிருந்தனர்.

“உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் அனைத்துமே காதலை அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லப் பட்ட படங்கள் தான். அந்த படங்களில் இசையும் மக்களை தியேட்டருக்கு இழுக்க முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. அந்த பார்முலாவில் உருவாகும் படமே ‘பியார் பிரேமா காதல்’. காதலை இந்தியில் பியார் என்றும் தெலுங்கில் பிரேமா என்றும் தமிழில் காதல் என்றும் அழைப்பார்கள், அதனால் இந்த டைட்டில் வைத்திருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் இளன்.

“ஒரு நல்ல காதல் கதை கிடைக்காதா என்று காத்திருந்த எனக்கு பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்த கதை இது. பாடல்கள் மெருகேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது,” என்கிறார் யுவன் சங்கர்ராஜா.

படப்பிடிப்பு விரைவில் சென்னையில் ஆரம்பமாக உள்ளது.

Read Previous

துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

Read Next

தீரன் அதிகாரம் ஒன்று – விமர்சனம்

Most Popular