கனடாவில் ‘நேத்ரா’ படத்தின் இசை வெளியீடு

ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நேத்ரா’ படத்தின் இசை வெளியீடு, கனடாவில் பிரம்மாண்ட முறையில் நடைப்பெற்றது.

22 படங்களை இயக்கிய, ஏ.வெங்கடேஷ் இயக்கி வரும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்ட, தயாரிப்பாளர் பர.ராஜசிங்கம், கனடா வாழ் தமிழர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் அதை நடத்திக் காட்டினார்.

இந்தப் படத்தில் வினய், தமன் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார். ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு – ஜெயப்பிரகாஷ், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – என்.கணேஷ்குமார், வசனம் – அஜயன்பாலா, லைன் புரொட்யூசர் – குமரவேல் பாண்டியன், கதை, திரைக்கதை, இயக்கம் – ஏ.வெங்கடேஷ். தயாரிப்பு – பர.ராஜசிங்கம், ஏ.வெங்கடேஷ்.

Read Previous

கடவுளும் மனிதனும் உரையாடும் ‘பிரம்மா.காம்’

Read Next

‘வேலைக்காரன்’, கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் – சிவகார்த்திகேயன்