‘அறம், தீரன்’ ஆராய்ச்சி செய்ய வைத்த படங்கள் – ஜிப்ரான்

வாகை சூடவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அறிமுகப் படத்திலேயே அவருடைய இசை பெரிதும் பேசப்பட்டது. கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘விஸ்வரூபம்’ படம் மூலம் அனைவருக்கும் தெரிந்த இசையமைப்பாளர் ஆனார்.

தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், சமீபத்தில் அவருடைய இசையில் வெளியான ‘அறம், தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்கள் மூலம் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறார்.

அந்தப் படங்களின் வெற்றி அவருக்கு தனி உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. அது பற்றி அவர் கூறியதாவது,

“நல்ல திரைப்படங்களில் ஒரு உயிர் இருக்கிறது, அதை என் இசையின் மூலம் வெளிக் கொண்டு வருவது தான் என் வேலை. இயக்குனரின் தெளிவான சிந்தனை, சிறப்பான திரைக்கதை, திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் என ‘அறம், தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன.

அந்த இரண்டு படங்களுமே பின்னணி இசைக்கு என்னை நிறைய ஆராய்ச்சி செய்ய உந்தியது. நான் இதுவரை வேலை செய்த படங்கள் எனக்கு மகிழ்ச்சியை அளித்ததோடு, பெருமைப்படவும் வைத்திருக்கிறது. இதேப் போல நல்ல படங்களுக்குத் தொடர்ந்து இசையமைக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன்.

என்னுடைய அடுத்த படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ இந்த மாதம் 15 ஆம் தேதி வெளி வர உள்ளது. இந்தப் படத்திலும் இசைக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது. படம் பார்க்கும் ரசிகர்கள் இசைப் பயணத்தை உணர்வார்கள்.

இந்த படத்தின் ஸ்கிரிப்டுக்கு ஏற்றவாறு படத்தை அணுகியிருக்கிறோம். இது வேகமான, ஜாலியான படம். ஒரு சில பெரிய படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறேன், விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்,” என்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

Read Previous

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்

Read Next

வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் கே.ஈ. ஞானவேல் ராஜா அணி