‘அதிபர்’ படத்தைத் தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் , அடுத்து தயாரிக்கும் மிகப் பிரமாண்டமான படம் ‘பக்கா’.
விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக நிக்கி கல்ரானி, பிந்துமாதவி இருவரும் நடித்துள்ளார்கள்.
மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர் மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T. சிவகுமார் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு சென்சாரில் ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் ‘பக்கா கமர்ஷியல்’ படமாக இருக்கிறது என்று பாராட்டினார்களாம்.
விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.