நெல்சன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றிக்கு படக்குழுவினர் அனைவருக்கும் பிரம்மாண்ட கார் ஒன்றினை பரிசளித்தார் கலாநிதி மாறன்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தினை இயக்கவுள்ளார் நெல்சன். இது தொடர்பான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இப்போதைக்கு ரஜினி தேதிகள் இல்லை என்பதால், பொறுமையாக இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, கடந்த வாரத்தில் அல்லு அர்ஜுனை சந்தித்துள்ளார் இயக்குநர் நெல்சன். இந்த சந்திப்பில் கதையொன்றை கூறியதாகவும், அது அல்லு அர்ஜுனுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்தகட்டத்துக்கு நகருமா என்பது வரும் நாட்களில் தெரியவ்ரும்.