ஏப்ரல் 17ல் வெளியாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’

‘சர்தார், லப்பர் பந்து’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள  ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) திரைப்படம் வரும் ஏப்-17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.. 

ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடிக்க, அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

‘கனா, நெஞ்சுக்கு நீதி‘ படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்தியாவில் ராஜஸ்தான், தூத்துக்குடி, குலுமணாலி, மும்பை, பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் மற்றும் இப்படத்தின் வேறு சில முக்கிய காட்சிகள்  அசர்பைஜான் நாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏ வெங்கடேஷ் இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். 

Read Previous

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’

Read Next

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு – கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியீடு

Most Popular