தயாள் பத்மநாபன் இயக்கும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து கதாபாத்திர அறிமுகத்தை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி.
படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு கதாபாத்திர முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது.
இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வெற்றி, அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா, மல்லிகாவாகவும், ‘பருத்தி வீரன்’ சரவணன், சற்குணம் ஆகவும், மாறன், மூர்த்தியாகவும் நடித்துள்ளனர். மேலும் பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்து கதைக்கு ஆழமும் வலிமையும் சேர்த்துள்ளனர்.
இந்தக் கதாபாத்திர அறிமுகத்தை மேலும் உயர்த்தும் வகையில், இசையமைப்பாளர் தர்புகா சிவா வழங்கியுள்ள பின்னணி இசை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இப்படத்தை K. V. சபரீஷ் , 2M Cinemas நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும், இயக்குநர் தயாள் பத்மநாபன் தனது D Pictures நிறுவனம் மூலம் இணைந்து தயாரித்துள்ளார்.
பரபரப்பான கிரைம் திரில்லர் ஆக உருவாகி வரும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, வலுவான நடிப்புகள் மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லலின் மூலம் நல்ல திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் குழு
கதை, இயக்கம் & இணை தயாரிப்பு: தயாள் பத்மநாபன்
திரைக்கதை & வசனம்: கவிதா பாரதி & தயாள் பத்மநாபன்
ஒளிப்பதிவு: M. V. பன்னீர்செல்வம்
எடிட்டிங்: V. பூபதி
இசை & பின்னணி இசை: தர்புகா சிவா
பாடல்கள் : பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன்
ப்ரொடக்ஷன் டிசைன்: அன்பு
மேக்கப்: குப்புசாமி
ஆடை வடிவமைப்பு: ரமேஷ்
தயாரிப்பு நிர்வாகிகள்: மாரியப்பன், குட்டி கிருஷ்ணன்
மக்கள் தொடர்பு : ரேகா.