சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடிக்கும் ‘மைக்கேல்’ முதல் பார்வை வெளியீடு

ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் சந்தீப் கிஷன் பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் 'மைக்கேல்' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் வெளியிடுகிறார் .

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'மைக்கேல்'. 

இந்த பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன் முறையாக பான் இந்திய நடிகராக அறிமுகமாகிறார். இவருடன் விஜய் சேதுபதி சிறப்பு அதிரடி வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் முதன்முதலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, வெளியாகவிருக்கும் ‘மைக்கேல்’ படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார்.

நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் 'கடவுள் மட்டுமே மன்னிக்கிறார்' என்ற வாசகம் இணைக்கப்பட்டிருக்கிறது. 
 

Read Previous

‘டான்’ தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக இருக்கும் – சிவகார்த்திகேயன்

Read Next

ஓராண்டு நிறைவு – முதல்வருக்கு சீனு ராமசாமி வேண்டுகோள்

Most Popular