விஷால், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ‘மார்க் ஆண்டனி’ படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றது.
அப்படத்தை மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் குமார் தயாரிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். படம் பெரிய வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்ததால் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தயாரிப்பாளர் பிஎம்டபிள்யூ கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், “அன்பான வினோத் சாருக்கு நன்றி. இந்த அழகான பிஎம்டபிள்யூவை எனக்குப் பரிசாக அளித்த நீங்கள் மிகவும் இனியானவர். மிகவும் அன்பான விஷயம் இது. மார்க் ஆண்டனி விஷால் அண்ணா மிக்க நன்றி, ஜாக்கி பாண்டியன் எஸ்ஜே சூர்யா சார், ஜிவி பிரகாஷ் சார், செல்வராகவன் சார், சுனில் சார், எடிட்டர் விஜய், அபிநந்தன், விஜய்முருகன்..இந்த வெற்றி நமது குழுவின் வெற்றி,” என படக்குழுவினர் அனைவரையும் டேக் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.