பேச்சுவார்த்தையில் மம்முட்டி பயோபிக்

முன்னணி நடிகரான மம்முட்டியின் பயோபிக் பேச்சுவார்த்தையில் இருக்கிறது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. இவருடைய கதைகள் தேர்வு குறித்து பல்வேறு திரையுலகினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள், இந்திய திரையுலகின் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மம்முட்டியின் பயோபிக் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. பெரும் வரவேற்பைப் பெற்ற ‘2018’ படத்தினை இயக்கிய ஜூடு ஆண்டனி ஜோசப் இதற்கான முன்னெடுப்பினை எடுத்துள்ளார். இதில் நிவின் பாலியை நடிக்க வைக்கவும் முடிவு செய்திருக்கிறார்.

இது தொடர்பாக மம்முட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவரோ இப்போதைக்கு வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அவர் விரைவில் சம்மதம் தெரிவிப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறது படக்குழு. இந்த விஷயத்தினை நிவின் பாலி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

Read Previous

இயக்குனர் ஆகும் எண்ணம் எனக்கு இல்லை – அர்ஜுன் தாஸ்

Read Next

’இந்தியன் 2’ பணிகள் தாமதம்: ஜூலையில் வெளியீடு