முதல் காட்சி பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ள ‘மாரீசன்’ டிரைலர்

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படைப்பான *மாரீசன்* திரைப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். வடிவேலு மற்றும் பகத் பாசில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வி. கிருஷ்ணமூர்த்தி எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார். 

வடிவேலு, பகத் பாசில் ஆகியோருடன் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, ‘ஃபைவ் ஸ்டார்’ கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை கலைச்செல்வன் சிவாஜி கையாண்டுள்ளார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ஸ்ரீ ஜித் சாரங் மேற்கொள்ள, கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். கிராமிய பின்னணியில் உருவாகியுள்ள இந்த ட்ராவலிங் திரில்லர் படத்தை பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜூலை 25, 2025 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை விட டிரைலர் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் மிகுந்த ஆதரவைப் பெற்று வருகிறது. 

மாமன்னன் படத்திற்கு பிறகு வடிவேலு-பகத் பாசில் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும், டிரைலரில் சிறு திருட்டுகளில் ஈடுபடும் ஒருவருக்கும், அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டவருக்கும் இடையேயான மறக்க முடியாத பயணத்தை சித்தரிக்கும் காட்சிகளும் பார்வையாளர்களிடையே முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியுள்ளது.

Read Previous

கிராமிய பின்னணியில் உருவான ‘வள்ளிமலை வேலன்’ இசை வெளியீடு

Read Next

ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ‘ஆஷா’

Most Popular