‘லவ் டூடே’ இந்தி ரீமேக்கில் பிரபலங்களின் வாரிசுகள்

‘லவ் டூடே’ படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபலங்களின் வாரிசுகள் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன், இவானா, ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லவ் டூடே’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார். 2022-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சுமார் 7 கோடியில் தயாரிக்கப்பட்டு 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

மாபெரும் வரவேற்பைப் பெற்றவுடன், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், தமிழில் கிடைத்த வரவேற்பு அளவிற்கு தெலுங்கில் கிடைக்கவில்லை. மேலும், இந்தியில் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார்கள்.

நீண்ட காலமாகவே இதன் ரீமேக் தயாரிப்பாளர், நடிகர்கள், இயக்குநர் உள்ளிட்டவர்களைத் தேர்வு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். இறுதியாக பிரதீப் ரங்கநாதன் கதாபாத்திரத்தில் ஆமிர்கானின் மகன் ஜுனைத் கான் நடிக்கவுள்ளார். இவானா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவின் இரண்டாவது மகன் குஷிகபூர் நடிக்கவுள்ளார். இதன் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

Read Previous

தீரஜுடன் இணைந்து நடிக்க ஆசை – ஜெயம் ரவி

Read Next

‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பு எப்போது?

Most Popular