லவ் அண்ட் வார் – விக்கி கௌஷல் முதல் பார்வை

சஞ்சய் லீலா பன்சாலியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘லவ் & வார்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகப் பிரம்மாண்டமான படங்களில் இந்திய சினிமாவில் புதியதொரு மைல்கல்லை உருவாக்கும் வகையில் உருவாகி வருகிறது.

திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகிய மூவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த பிரம்மாண்டமான சஞ்சய் லீலா பன்சாலி படைப்பு, ரசிகர்களுக்கு இதுவரை காணாத ஒரு சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே இருக்கும் நிலையில், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. இரு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது விக்கி கௌஷலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இந்த போஸ்டர்கள் அவரது கதாபாத்திரத்தின் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன.

விக்கி கௌஷலின் இதுவரை பார்த்திராத ஒரு புதிய பரிமாணத்தை இந்த போஸ்டர்கள் வெளிப்படுத்துகின்றன. முதன்முறையாக சஞ்சய் லீலா பன்சாலியின் உலகில் ஒரு கதாநாயகனாக விக்கி கௌஷல் களமிறங்குவது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது அபாரமான நடிப்புத் திறன் இந்தப் படத்தில் எவ்வாறு வெளிப்படப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

படக்குழுவினர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இரு போஸ்டர்களையும் பகிர்ந்து பதிவிட்டுள்ளனர்.

படத்தில் நடித்துள்ள முன்னணி நட்சத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இப்படம் 2027 ஜனவரி 21 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

Read Previous

ராமாயணா – ராவணன் ஆ யாஷ்