கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ‘கிடா’

தெலுங்கு திரையுலகில் 35 வருடங்களாக பல வெற்றிப்படங்களைத் தந்தஸ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட்  இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் ‘கிடா’.

மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப் பிணைப்பைச் சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் முழுதாக முடிந்தவடைந்த நிலையில், திரைக்கு வரும் முன்னதாகவே  கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வாகி உள்ளது. கோவா திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில் பங்கேற்க உள்ள மூன்று தமிழ்ப் படங்களில், ஒரு படமாக இப்படம் தேர்வாகியுள்ளது.  

தமிழர்களின் வாழ்வியலை அச்சு அசலாகத்  திரையில் வடிக்கும், ஒரு மாறுபட்ட காவியமாக இப்படம் உருவாகியுள்ளது. 

புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியுள்ள இப்படத்தை “கிருமி, றெக்க” படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ரா வெங்கட் இயக்கியுள்ளார். 

Read Previous

தமிழில் படம் தயாரிக்கும் கிரிக்கெட் வீரர் தோனி

Read Next

‘பனாரஸ்’ பட விழாவில் கன்னட நடிகர் தர்ஷன் வாழ்த்து

Most Popular