கடைசி கட்டப் படப்பிடிப்பில் ‘காசேதான் கடவுளடா’

தமிழ் சினிமாவில் வெளிவந்த எவர்கிரீன் காமெடி படமான ‘காசேதான் கடவுளடா’ படத்தின் ரீமேக் தற்போது கண்ணன் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி, சிவாங்கி, தலைவாசல் விஜய், மனோபாலா  உள்ளிட்ட மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இப்படம் உள்ளது.  

படம் பற்றி இயக்குநர் கண்ணன் இது குறித்து கூறியதாவது… 

“படப்பிடிப்பு திட்டமிட்டபடி மிகச் சரியாக  நடைபெறுவதற்கு முழு முதல் காரணமாக இருந்தது, எனது படக்குழுவினர் தான்.  அவர்களுக்கு, என் மனதார நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்திற்காக முழு ஈடுபாட்டுடன், தங்களது முழு உழைப்பையும்  தந்த  மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி , கருணாகரன் மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றி.  

தற்போது படத்தின் 80% சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்ட  படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.  விரைவில் படத்தின் டிரைலர், இசை மற்றும் பட வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளோம்,” என்றார். 

இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது. 

N. கண்ணன் இசையமைக்க, பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார். MKRP புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார் கண்ணன். 

Read Previous

கசடதபற – அடுத்த ஆந்தாலஜி ‘சோனி லிவ்’ ஓடிடி தளத்தில்…

Read Next

நட்டி ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத்

Most Popular