திரைக்கதை எழுதும் கமல்ஹாசன்

தனுஷ் நடிக்கவுள்ள இளையாராஜா பயோபிக்கிற்கு திரைக்கதை எழுதுகிறார் கமல்.

‘ராயன்’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘குபேரா’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இந்தப் படங்களைத் தொடர்ந்து அவருடைய அடுத்த படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

ஆனால், இளையராஜா பயோபிக்கில் நடிக்கவிருப்பதை உறுதிச் செய்தார் தனுஷ். இதற்கான அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கமல், பாரதிராஜா, கங்கை அமரன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

இளையராஜா பயோபிக்கை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இளையராஜாவே இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளார். இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இளையராஜா பயோபிக்கிற்கு திரைக்கதை எழுதுவதை உறுதிச் செய்திருக்கிறார் கமல்ஹாசன். ஆனால், படம் தொடர்பான அறிமுக விழா அல்லாமல், சீங்கிதம் சீனிவாசராவ் படங்கள் திரையிடல் விழாவில் இதனை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இளையராஜா பயோபிக்கில், பல்வேறு முன்னணி பிரபலங்களையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ரத்தம் தெறிக்கும் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் எப்படி இளையராஜா பயோபிக்கை இயக்குவார் என்று இணையத்தில் எதிர்வினைகளையும் தொடங்கியிருக்கிறது.

Read Previous

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சூர்யா விலகியது ஏன்? – கெளதம் மேனன் விளக்கம்

Read Next

2 கோடி டீசர் பார்வைகளை கடந்த கங்குவா பட டீசர்

Most Popular