மாலத்தீவில் ஹனிமூன் பயணத்தில் காஜல் அகர்வால்

பாலிவுட் நடிகைகளுக்கும் மாலத் தீவிற்கும் ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருக்கிறது போலிருக்கிறது. எங்காவது ஓய்வெடுக்க வேண்டும் என்றால் உடனடியாக மாலத் தீவிற்குச் சென்றுவிடுகிறார்கள். 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் கௌதம் கிச்லுவுக்கும் அக்டோபர் மாதம் 30ம் தேதி திருமணம் நடைபெற்றது.

தெலுங்கில் நடித்து வரும் ‘ஆச்சார்யா’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் காஜல் உடனடியாக ஹனிமூன் செல்லவில்லை என்றார்கள். ஆனால், இரு தினங்களுக்கு முன்பு ‘ரெடி டூ கோ’ என சில பயணப் புகைப்படங்களைக் பகிர்ந்திருந்தார்.

நேற்று மாலத்தீவில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும், தனிப் புகைப்படங்கள் சிலவற்றையும் பதிவிட்டிருந்தார். ஹனிமூனிலிருந்து வந்த பின் அவர் ‘ஆச்சார்யா’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

தமிழில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.

 

Read Previous

நவம்பர் 9ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

சித்த மருத்துவர் பாதுகாப்புடன் மீண்டும் ஆரம்பமான ‘மாநாடு’

Most Popular