‘மண்டாடி’ சுஹாஸ் நடிக்கும் ‘ஹைட் & சில்க்’

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் & சில்க்’ (Hide & Silk).

சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்கள். தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகர் வருண் தேஜ், தமிழ் ரசிகர்களுக்காக நடிகர் சூரி, ஆகியோர் இப்படத்தின் டைட்டில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இதுவரை 18 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது தெலுங்குத் திரையுலகிலும் தனது தயாரிப்புப் பணிகளை விரிவுபடுத்தும் அவர், நான்கு திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். அந்த வரிசையில் உருவாகும் முதல் திரைப்படம் ‘ஹைட் & சில்க்’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் புதிய முயற்சியில் கார்த்திகேயன் சந்தானத்தின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் வர்திகா ஜெயினின் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

‘மண்டாடி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுஹாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘லப்பர் பந்து’, ‘DC’ ஆகிய படங்களில் நடித்துள்ள சஞ்சனா, மூத்த நடிகர் தனிகெல்லா பரணி, நந்து மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜேந்திர பாலா, இப்படத்தை எழுதி இயக்குகிறார். அவர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் இது.

தொழில்நுட்பக் குழுவிலும் குறிப்பிடத்தக்க கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவை கார்த்திக் பழனி மேற்கொள்ள, படத்தொகுப்புப் பணிகளை ஷஃபீக் முகமது அலி கவனிக்கிறார். ‘3 BHK’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார்.

‘அனிமல்’, ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய சுரேஷ் செல்வராஜன் தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார். ஜஷுவா சண்டைக் காட்சிகளையும், பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். ஷெரீப் நடன இயக்குநராகவும், மோகன் ராஜன் பாடலாசிரியராகவும் பணியாற்றுகின்றனர். ஒலி வடிவமைப்புப் பணிகளை சுரேன் ஜி மற்றும் அழகிய கூத்தன் மேற்கொள்ள, ஒலி கலவைப் பணிகளை சுரேன் ஜி கவனிக்கிறார். அமோல் போடகே கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

கார்த்திகேயன் சந்தானம் மற்றும் வர்திகா ஜெயின் இணைந்து தயாரிக்கும் ‘ஹைட் & சில்க்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீடு மற்றும் இதர விவரங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும்.

நடிகர்கள்: சுஹாஸ், சஞ்சனா, தனிகெல்லா பரணி, நந்து, கருணாகரன்.

தொழில்நுட்பக் குழு

  • எழுத்து, இயக்கம்: ராஜேந்திர பாலா
  • தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம், வர்திகா ஜெயின்
  • ஒளிப்பதிவு: கார்த்திக் பழனி
  • படத்தொகுப்பு: ஷஃபீக் முகமது அலி
  • இசை: அம்ரித் ராம்நாத்
  • தயாரிப்பு வடிவமைப்பு: சுரேஷ் செல்வராஜன்
  • சண்டைப் பயிற்சி: ஜஷுவா
  • ஆடை வடிவமைப்பு: பிரவீன் ராஜா
  • நடன இயக்கம்: ஷெரீப்
  • பாடலாசிரியர்: மோகன் ராஜன்
  • கலை இயக்கம்: அமோல் போடகே
  • ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி, அழகிய கூத்தன்
  • ஒலி கலவை: சுரேன் ஜி
  • தயாரிப்பு நிறுவனங்கள்: ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ, மிஸ்ரிலால் பிக்சர்ஸ்

Read Previous

ஹைக்கூ – இசை வெளியீட்டு விழா

Read Next

டோனி ஜா நடிப்பில் ‘குற்றவாளிகள்’