தயாரிப்பில் இறங்கும் கோல்டு மைன்ஸ் நிறுவனம்

லாரன்ஸ் படத்தினை தயாரிப்பதன் மூலம் தயாரிப்பாளராக களமிறங்குகிறது கோல்டு மைன்ஸ் நிறுவனம்.

தமிழில் படங்கள் தயாரித்தால், அதன் இந்தி உரிமையைக் கைப்பற்றும் நிறுவனமாக கோல்டு மைன்ஸ் நிறுவனம் இருக்கும். இந்த நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் அனைத்து தமிழ் படங்களின் இந்தி டப்பிங் இருக்கும். அவை அனைத்துமே மில்லியன் கணக்கில் பார்வைகள் கொண்டதாக இருக்கும்.

கோல்டுமைன்ஸ் யூடியூப் தளம் என்பது சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலம். தற்போது லாரன்ஸ் நடிக்கவுள்ள படத்தினை தயாரிப்பதன் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறது. இந்தப் படத்தினை ‘அயோக்யா’ படத்தின் இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கவுள்ளார்.

லாரன்ஸ் – வெங்கட் மோகன் இணையும் படம், பெரிய பட்ஜெட் படமாக உருவாகிறது. இதனால் இரண்டு தயாரிப்பாளர்கள் இணைந்து இந்தப் படத்தினை தயாரிக்கவுள்ளார்கள். கோல்டுமைன்ஸ் மற்றும் சத்யஜோதி நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.

தமிழ் திரையுலகில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு இந்தப் படத்தின் பட்ஜெட் இருக்கும் என்கிறார்கள் கோலிவுட்டில்.

Read Previous

’கள்வன்’ வெளியீட்டு அறிவிப்பு : பின்னணி என்ன ?

Read Next

வில்லனாக அறிமுகமாகும் பரத்

Most Popular