ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கிஷோர் பி பெலேகர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதரி, சித்தார்த் ஜாதவ், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காந்தி டாக்ஸ்’.
பேச்சு இல்லாத மௌனப் படமாக உருவாகும் இப்படம் ‘பிளாக் காமெடி’ வகைப்படமாக உருவாகி வருகிறது.
படம் பற்றி இயக்குநர் கிஷோர் பி பெலேகர் கூறுகையில்,
“மௌனப் படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல. இது கதை சொல்லலின் ஒரு வடிவம். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரசியமும், சவாலும் கலந்தது,” என்கிறார்.
ஜீ ஸ்டுடியோஸ் சிபிஓ, ஷாரிக் படேல் கூறுகையில்,
“இதன் கதை தனித்துவமானது, அனைவரும் தங்கள் வாழ்வுடன் தொடர்புபடுத்தக் கூடியது. பலமான கமர்ஷியல் அம்சங்களுடன் நல்ல பொழுதுபோக்கை இக்கதை கொண்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சுவாமி ஆகியோருடன் ஒரு மௌனப் படத்தில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புது முயற்சி எங்களுக்கு மிகவும் மிகப் பெரிய மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தந்துள்ளது,” என்கிறார்.
‘காந்தி டாக்ஸ்’ படத்தை கியோரியஸ் டிஜிட்டல் மற்றும், மூவீ மில் என்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பு செய்கின்றனர். இப்படம் உலகம் முழுவதும் 2023ல் வெளியாக உள்ளது.